இன்று (18.04.2023) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் தலைமையில், யுனெஸ்கோ- திருக்குறள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம்,இ,ஆ,ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.ஒளவை அருள், தமிழ்ப் பல்கலைக்கழகம் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம.இராஜேந்திரன், சென்னை பல்கலைக்கழகம் திருக்குறள் ஆராய்ச்சி மைய மேனாள் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு, சென்னை பல்கலைக்கழகம் மேனாள் பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் துணைத் தலைவர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆய்வுத் தகைமையர் முனைவர் ப.மருதநாயகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குநர் முனைவர் இரா.சந்திரசேகரன், ஐக்கிய நாட்டின் அரசியல் பிரிவு அவை மேனாள் உயர் அலுவலர் முனைவர் இரா.கண்ணன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.