PM Modi has used his foreign visits as a vehicle to promote Indian culture. In Japan, the PM unveiled a statue of Mahatma Gandhi at Hiroshima. In Papua New Guinea, he released the Thirukkural, a classic Tamil language text in local lanaguage Tok Pisin.
தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!
இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. திருமதி சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்.
குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் திரு.சசீந்திரன் மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார்.